2020 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஏப்ரல் 14, 2020 முதல் சிறப்பான பலன்களைத் தரும். விரைவாக நகரும் புதன் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து தொடர்ந்து உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். கேது உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உத்தியோகத்தில் முன்னேற்றத்தைப் பெற உதவுவார்.
எனினும், முக்கிய கிரகங்களான, சனி பகவான், செவ்வாய் மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து மன உளைச்சல்களை உண்டாக்கக் கூடும். உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் உண்டாகும். ஏழரை சனியின் தாக்கம் இந்த மாதம் அதிகமாக இருக்கக் கூடும். இந்த சஞ்சாரத்தால், உங்கள் குடும்ப பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கக் கூடும். உங்கள் நிதிளையும் பாதிக்கக் கூடும்.


எதிர்பாராவிதமாக, தற்போது நீங்கள் சோதனை காலத்தில் அடுத்த 12 வாரங்களுக்கு இருப்பீர்கள். எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின்னர் செயல்படுவது நல்லது. சுப காரியங்கள் நடத்த முயற்சித்தாலும், அதில் அதிக செலவுகளும், அழுத்தம் நிறைந்த சூழலும் உண்டாகக் கூடும்.


Prev Topic

Next Topic