2020 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஏப்ரல் 14, 2020 வரை நீங்கள் சாதகமான பலனைப் பெறுவீர்கள். விரைவாக நகரும் புதன் உங்களுக்கு இந்த மாதத்தின் அனேக நேரங்களில் நல்ல பலன்களையே தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு தொடர்ந்து நல்ல பலன்களைத் தருவார்.
எனினும், குரு, செவ்வாய் மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. இந்த கிரகங்களால் உண்டாகும் எதிர்மறை சக்திகளின் அளவு மிக அதிகமாக இருக்கக் கூடும். இதனால் உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் அதிகரிக்கும். நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள். உங்கள் உடல் நலம், உத்தியோகம், நிதி நிலை மற்றும் உறவுகள் குறித்த விடயங்களில் உங்களுக்கு பிரச்சனைகள் உண்டாகக் கூடும்.


செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் உச்சம் பெறுவதால், உங்கள் கோபம் அதிகரிக்கும். நீங்கள் கடுமையான வார்த்தைகளை பேசக் கூடும். இதனால் உங்கள் பிரச்சனைகள் அதிகரிப்பதோடு, உங்கள் நிலமையும் மோசமாகக் கூடும். நீங்கள் இந்த சோதனை காலத்தை கடக்க உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.


Prev Topic

Next Topic