2020 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், இந்த மாதம் முழுவதும் நீங்கள் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். விரைவாக நகரும் புதன் உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து சில ஏமாற்றங்களை தரக் கூடும். ராகு உங்கள் ஜென்ம ராசியிலும், கேது களத்திற ஸ்தானத்திலும் சஞ்சரித்து உங்கள் குடும்ப வாழ்க்கையில் கலவையான பலன்களை தரக் கூடும்.
எனினும், பலவீனமான ஒரு விடயம் என்னவென்றால், முக்கிய கிரகங்களான குரு, சனி பகவான் மற்றும் செவ்வாய் இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிபப்து தான். இதனால், இந்த மாதம் நாட்கள் நகர நகர, விடயங்கள் விரைவாக உங்கள் கட்டுபாட்டை மீறி நடக்கக் கூடும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், விடயங்கள் மிக மோசமாகக் கூடும். உங்கள் வாழ்க்கையின் பல விடயங்களில் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.


சுப காரியங்கள் நடத்த இது ஏற்ற நேரம் இல்லை. உங்கள் மறைமுக எதிரிகளால் அதிக பிரச்சனைகளும், உங்களுக்கு எதிரான சதிகளும் நடக்கக் கூடும். நீங்கள் கவனமாக இல்லையென்றால், நீங்கள் அவமானப்படும் சூழலும் ஏற்படக் கூடும். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு, உங்கள் வாழ்க்கையின் இந்த மோசமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்க வேண்டும்.


Prev Topic

Next Topic