2020 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு ஏப்ரல் 14, 2020 அன்று பெயருகிறார். சூரியன் மேஷ ராசியில் உச்சம் பெறுவது இந்த மாதத்தின் ஒரு முக்கிய நிகழ்வாகும். சுக்கிரன் வேகம் குறைந்த ரிஷப ராசியில் இந்த மாதம் முழுவதும் சஞ்சரித்து, மே 12, 2020 அன்று வக்கிர கதி அடைவார். இந்த மாதம் புதன் விரைவாக நகரும் கிரகமாக இருக்கும். புதன் 2௦ கோணத்தில் கும்ப ராசியில் தொடங்கி, மீன ராசியை கடந்து, 12 கோணத்தில் மேஷ ராசியை இந்த மாத இறுதியில் அடைவார்
இந்த மாதம் முழுவதும், செவ்வாய் உச்சம் பெற்ற நிலையில் மகர ராசியில் சஞ்சரிப்பார். ராகு மிதுன ராசியிலும், கேது தனுசு ராசியிலும், இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள். சனி பகவான் மகர ராசியில், செவ்வாய் மற்றும் குருவுடன் இணைந்து சஞ்சரிப்பார்.
செவ்வாய் மற்றும் குரு நீச்ச பங்க யோகத்தை உண்டாக்குவார்கள். குரு மற்றும் சனி பகவான் மற்றுமொரு நீச்ச பங்க யோகத்தை உண்டாக்குவார்கள். குரு மற்றும் செவ்வாய் இணைந்து குரு மங்கள யோகத்தை உண்டாக்குவார்கள். இந்த மாதம் அரசியல், உலக பொருளாதார திட்டங்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுவதோடு, இரண்டு நாடுகளுக்கு இடையே சண்டை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சனி பகவான், செவ்வாய் மற்றும் குரு இணைந்து, இந்த மாதம் ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களாக இருப்பார்கள்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.