![]() | 2020 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், 9ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது இந்த மாதம் உங்களக்கு சாதகமற்ற நிலையை காட்டுகின்றது. ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. புதன் விரைவாக நகர்ந்து, உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் தொடர்ந்து சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். செவ்வாய் உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பார்.
எனினும், குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து சில பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். குரு மற்றும் சுக்கிரநின் சஞ்சாரம் அதிக சண்டைகளையும், வாக்குவாதங்களையும் உண்டாக்கக் கூடும். எனினும், சனி பகவான் மற்றும் செவ்வாயின் பலத்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மேலும் முன்னேறிச் செல்வீர்கள். இருப்பினும், இந்த வெற்றியின் பதை உங்களுக்கு சுலபமாக இருக்காது. நீங்கள் பல தடைகளையும், சண்டைகளையும், சந்தித்த பின்னரே வெற்றியை அடைய முடியும்.
உங்கள் மகா தசை சாதகமற்ற நிலையில் இருந்தால், குருவின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கக் கூடும். இல்லையென்றால், சனி பகவான் மற்றும் செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic