2020 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. உங்களால் ராகு மற்றும் கேதுவிடம் இருந்து எந்த பலன்களையும் எதிர் பார்க்க முடியாது. புதன் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் நல்ல பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல அதிர்ஷ்டத்தை தருவார்.
சனி பகவான், குரு மற்றும் செவ்வாய் இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார்கள். வர்த்தகத்தில் இருந்து உங்களுக்கு விண்ணைத்தொடும் அளவு லாபம் கிடைக்கும். அல்லது, அதிர்ஷ்ட சீட்டில் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு பண மழை பொழிய வாய்ப்பு உள்ளது.


இந்த மாதம் உங்கள் வாழ்க்கையிலேயே ஒரு சிறந்த காலகட்டமாக இருக்கும். இரண்டு நீச்ச பங்க ராஜ யோகம் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் உண்டாகி, நீண்ட காலத்திற்கு உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். மேலும் இதனால் உங்கள் கனவுகளும் நினைவாகும். இந்த மாதத்தின் அனேக நாட்கள் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த வாய்ப்பை பற்றிக் கொண்டு, உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக செட்டில் ஆக முயற்சி செய்யுங்கள்.


Prev Topic

Next Topic