![]() | 2020 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், இந்த மாதம் நீங்கள் நல்ல பலன்களை எதிர் பார்க்க முடியாது. சுக்கிரன் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு உடல் உபாதைகளை உண்டாக்கக் கூடும். ராகு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிலும், கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரித்து உங்கள் உறவுகளுடன் உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருந்து விலகுவதால் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், குரு பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு இந்த மாதம் முழுவதும் அதி சரமாய் பெயருவதுதான். இதனால் மற்ற கிரகங்களின் தாக்கங்கள் தடுக்கப்பட்டு, பல மடங்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட காலத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் இந்த மாதம் சிறப்பான பலன்களை நீங்கள் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையின் பல விடயங்களில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். மேலும் அடுத்த 12 வாரங்களுக்கு உங்களுக்கு இந்த அதிர்ஷ்டம் தொடரும். இந்த வாய்ப்பை பற்றிக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டில் ஆக முயற்சி செய்யுங்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic