![]() | 2020 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், இந்த மாதத்தின் முதல் பாதியில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். புதன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் அனேக நேரங்களில் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து, உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார்.
ராகு மற்றும் கேதுவிடம் இருந்து எந்த நற்பலன்களையும் எதிர் பார்க்க முடியாது. எனினும், குரு மற்றும் செவ்வாய் இணைந்து உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து, உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார்கள். மேலும் குரு மற்றும் சனி பகவான் இணைந்து சஞ்சரித்து, உங்களுக்கு நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்கி, நல்ல அதிர்ஷ்டத்தை தருவார்கள்.
இந்த மாதம் உங்கள் நேர்மறை சக்தியின் அளவு அதிகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையின் பல விடயங்களில் நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தை காண்பீர்கள். நீண்ட காலத்திற்கு பிறகு இந்த மாதம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
Prev Topic
Next Topic