2020 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டிற்கு பெயருவது இந்த மாதம் சிறப்பாக இல்லை. ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் சிறப்பாக இல்லை. விரைவாக நகரும் புதனும் உங்களுக்கு தலைவலி மற்றும் பதற்றமான சூழலை உண்டாக்கக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து மன உளைச்சலை உண்டாக்கக் கூடும்.
செவ்வாய் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து ஜென்ம ராசியை பார்வை இடுவதால், உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து குடும்பம் மற்றும் அலுவலகம் போன்ற இரண்டிலும் அரசியலை உண்டாக்கக் கூடும்.


மொத்தத்தில், அனேக கிரகங்கள் சாதகமற்ற நிலையில் சஞ்சரிகின்றனர். கேது உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு நல்ல உதவியை செய்வார். தற்போது நீங்கள் சோதனை காலத்தில் இருகின்றீர்கள். உங்கள் வாழ்க்கையின் கடுமையான காலகட்டம் அடுத்த சில மாதங்களுக்கு எந்த இடைவேளையும் இல்லாமல் தொடரும்.


Prev Topic

Next Topic