![]() | 2020 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக இல்லை. ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. எனினும், சுக்கிரன் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு உடல் நல பிரச்சனைகளை தரக் கூடும். புதன் ஆகஸ்ட் 16, 2020 முதல் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். எனினும்,. செவ்வாய் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்களுக்கு ஆகஸ்ட் 17, 2020 முதல் பதற்றத்தை தரக் கூடும்.
குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது, கடந்த சில மாதங்களை விட தற்போது நல்ல முன்னேற்றத்தை தரக் கூடும். சனி பகவான் உங்களுக்கு இந்த மாதம் எந்த பிரச்சனைகளையும் தர மாட்டார். மேலும் உங்கள் உத்தயோகத்தில் ஓரளவிற்கு முன்னேற்றத்தை தரக்கூடிய மாதமாக இருக்கும். அதிக செலவுகள் இருந்தாலும், அவை காரணத்தோடே இருக்கும்.
உங்கள் உடல் நலத்தின் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் பிறருடன் பேசும் போது ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து கவனமாக பேச வேண்டும். கடந்த மாதத்தை விட இந்த மாதம் நீங்கள் நலல் பலன்களைப் பெறுவீர்கள். எனினும், அடுத்த 7 வாரங்களுக்கு ஜென்ம ராசி நடைபெறுவதால், நீங்கள் அதிக சவால்களை சந்திக்க நேரிடலாம்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic