2020 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து ஆகஸ்ட் 17, 2020க்கு மேல் நல்ல பலன்களைத் தருவார். புதன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து கலவையான பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. ராகு உங்கள் ஜென்ம ராசியிலும், கேது களத்திற ஸ்தானத்திலும் சஞ்சரித்து உங்களுக்கு பதற்றமான சூழ்நிலையை உண்டாக்கக் கூடும்.
செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு பெயர்ந்து ஆகஸ்ட் 17, 2020க்கு மேல் நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும், உங்கள் வளர்ச்சியை பாதிக்க மாட்டார். குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார். உங்களுக்கு இந்த மாதம் பல நல்ல வாய்ப்புகள் வருவதை நீங்கள் காணலாம். உங்கள் உடல் நலம், குடும்பம் மற்றும் உறவுகள், உத்தியோகம், நிதி நிலை மற்றும் முதலீடுகள் போன்ற விடயங்களில் பல மடங்கு முன்னேற்றம் ஏற்படும். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic