2020 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


சூரியன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ஆகஸ்ட் 16, 2020 அன்று பெயருகிறார். செவ்வாய் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு ஆகஸ்ட் 16, 2020 அன்று பெயருகிறார். சுக்கிரன் இந்த மாதம் முழுவதும் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். புதன் கடக ராசி மற்றும் சிம்ம ராசியில் இந்த மாதம் அனேக நாட்கள் சஞ்சரிப்பார்.
வக்கிர கதி அடைந்த குரு இந்த மாதம் முழுவதும் தனுசு ராசியில் வேகம் குறைந்து காணப்படுவார். வக்கிர கதி அடைந்த சனி பகவான் தொடர்ந்து மகர ராசியில் இந்த மாதம் முழுவதும் வேகம் குறைந்த காணப்படுவார். ராகு மிதுன ராசியிலும், கேது தனுசு ராசியிலும் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள்.


குரு செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய இரண்டு கிரகங்களையும் ஆகஸ்ட் 17, 2020 வாக்கில் பார்வை இடுவதால், இது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த மாதத்தின் இரண்டாம் பாகத்தில் செவ்வாய், சூரியன் மற்றும் குருவின் நிலைப்பாட்டால் மகா தசை சாதகமாக உள்ளவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். தங்கள் பிறந்த சாதகத்தில் பரிவர்த்தன யோகம் மற்றும் குரு மங்கள யோகம் இருப்பவர்கலும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பங்கு சந்தை தொடர்ந்து நிலையற்ற ஏற்ற இரக்கத்தை சந்திக்கும், மேலும் ஆகஸ்ட் 17, 2020க்கு பிறகு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக் கூடும்.




Prev Topic

Next Topic