![]() | 2020 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து ஆகஸ்ட் 16, 2020 வரை நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. விரைவாக நகரும் புதன் ஆகஸ்ட் 16, 2020 வரை உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 8ஆம் வீடான அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ந்து உத்தியோகத்தில் அழுத்தம் மற்றும் பதற்றம் நிறைந்த சூழலை ஆகஸ்ட் 17, 2020 முதல் தரக்கூடும். ஆகஸ்ட் 17, 2020 முதல் விரைவாக நகரும் அனைத்து கிரகங்களும், சாதகமற்ற நிலையில் சஞ்சரிகின்றனர்.
சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்பம் மற்றும் உறவுகள் குறித்த விடயங்களில் உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதற்றமான சூழலை உண்டாக்கக் கூடும். ராகு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிலும், கேது 4ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால், சாதகமற்ற பலன்களே உண்டாகும். குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து சொத்து குறித்த பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். இந்த மாதம் மொத்தத்தில் விடயங்கள் சிறப்பாக இல்லை. அடுத்த சில மாதங்களுக்கு நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic