![]() | 2020 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
டிசம்பர் 2020 மகர ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதத்தின் முதல் பத்தி வரையில் மட்டுமே சிறப்பாக உள்ளது. செவ்வாய் உங்கள் ராசியின் 3ஆம் வெட்டில் சஞ்சரித்து டிசம்பர் 24, 2020 வரை நல்ல பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் முழுவதும் நல்ல பலன்களைத் தருவார்.
ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்ப சூழலில் சில பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். ஆனால் கேது உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல பலன்களைத் தருவார். சனி பகவான் உங்கள் ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரித்து, ஜென்ம சனியாக இருப்பது உங்களுக்கு ஒரு பலவீனமான விடயமாகும் ஜென்ம சனி உங்களுக்கு உடல் உபாதைகள் மற்றும் நீங்கள் எதை செய்தாலும் அதில் தடைகளையும் உண்டாக்குவார்.
விடயங்களை மேலும் மோசமாக்கும் விதமாக குருவும் தற்போது உங்கள் ஜென்ம ராசிக்கு பெயர்ந்துள்ளார். உங்களுக்கு ஒரே நேரத்தில் ஜென்ம சனி மற்றும் ஜென்ம குரு ஆகிய இரண்டும் நடை பெறுகிறது. எதிர்பாராவிதமாக. உங்கள் வாழ்நாளிலேயே இது மிகவும் மோசமான காலகட்டமாக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு எந்த நேரமும் எதிர்பாராத சாதகமற்ற செய்திகள் வரக் கூடும்.
சனி பகவான் மற்றும் குரு உங்கள் பிறந்த சாதகத்தில் நல்ல நிலையில் சஞ்சரித்தால், இந்த சஞ்சாரத்தால் உங்களுக்கு டிசம்பர் 1௦, 2020 முதல் டிசம்பர் 25, 2020 வரையிலான காலகட்டத்தில் திடீர் அதிர்ஷ்டத்தை உண்டாக்குவார்கள். மேலும் சோதனை காலமும் தொடரும். இதை மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கலாம். அப்படி இல்லை என்றால், இது உங்களுக்கு மிகவும் மோசமான மாதமாக இருக்கும்.
Prev Topic
Next Topic