![]() | 2020 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
டிசம்பர் 2020 சிம்ம ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. செவ்வாய் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் தொடர்ந்து சஞ்சரித்து பின்னடைவுகளை உண்டாக்குவார். புதன் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார், ஆனால் அது இந்த மாதத்தின் முதல் பாதி வரையில் மட்டுமே. சுக்கிரன் இந்த மாதம் முழுவதும் நல்ல பலன்களைத் தருவார்.
ராகு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிலும், கேது 4ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் பலவீனமான விடயமாகும். ஆனால் சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து மற்ற கிரகங்களால் ஏற்படும் தாக்கத்தில் இருந்து உங்களை பாதுகாப்பார்.
மொத்தத்தில், நேர்மறை சக்திகளை விட எதிர்மறை சக்த்திகள் அதிகமாக உள்ளது. சனி பகவான் விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்காமல் பார்த்துக் கொள்வார். ஆனால், நீங்கள் இந்த மாதம் சவால்களை சந்தித்து தான் ஆக வேண்டும். அடுத்த 4 மாதங்களுக்கு நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள்.
Prev Topic
Next Topic