![]() | 2020 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
டிசம்பர் 2020 மீன ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 1௦ஆம் வீட்டில் இந்த மாதம் சஞ்சரித்து நல்ல பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், 9ஆம் வீட்டிலும் சஞ்சரித்து நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்குவார். புதன் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து சில பதற்றத்தை உண்டாக்குவார். ஆனால், சுக்கிரன் மற்றும் புதன் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், செவ்வாயின் தாக்கம் குறைவாக இருக்கும்.
ராகு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பார். 9ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் கேதுவின் தாக்கம் குறைவாகவே இருக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியையும், வெற்றியையும் அதிகரிப்பார். குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்களுக்கு விண்ணைத் தொடும் லாபத்தையும் பெரும் அளவு அதிர்ஷ்டத்தையும் உங்களுக்குத் தருவார்.
குரு மற்றும் சனி பகவான் உங்கள் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து பெரும் அளவு அதிர்ஷ்டத்தை உண்டாக்குவார்கள். இந்த சஞ்சாரம் பிற ராசிக்காரர்களை விட உங்கள் ராசிக்காரர்களுக்கு அதிக பலன்களைத் தரும். கோச்சார கிரகங்களின் அடிப்படையில் இப்படி ஒரு பொற்காலத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் காண முடியாது.
உங்களுக்கு அப்படி நல்ல பலன்கள் கிடைக்கவில்லை என்றால், உங்கள் பிறந்த சாதகத்தை பார்க்கவும். மேலும் உங்கள் சோதிடரை அணுகி உங்களுக்கு பிரச்சனை தரக்கூடிய விடயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Prev Topic
Next Topic