![]() | 2020 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. புதன் உங்கள் ஜென்ம ராசியில் வக்கிர கதி அடைந்து உங்கள் பதற்றத்தை அதிகரிக்கக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. எனினும், குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து ராகுவின் தாக்கத்தை தடுப்பார்.
செவ்வாய் மற்றும் குரு குரு மங்கள யோகத்தை உண்டாக்கி உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார்கள். தற்போது உங்களுக்கு ஏழரை சனி காலம் தொடங்கி இருந்தாலும், இந்த மாதம் அதன் தாக்கம் இருக்காது. மேலும் விண்ணைத் தொடும் அளவிற்கு உங்களுக்கு வெற்றியும், வளர்ச்சியும் உண்டாகும்.
இந்த மாதம் உங்களுக்கு பண மழை பொழியும். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். இந்த மாதத்தை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டில் ஆகி விட முயற்சி செய்யுங்கள். உங்கள் நேரத்தையும், பணத்தையும், தானம் செய்வதிலும், நற்காரியங்கள் செய்வதில் செலவிடுவது நல்லது.
Prev Topic
Next Topic



















