![]() | 2020 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமான நிலையை காட்டுகின்றது. புதன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவது உங்களுக்கு நல்ல அதிர்ஷத்தை உண்டாக்கும். குரு, செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து இந்த மாதம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்குவார்கள்.
சுக்கிரன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. எனினும் ராகு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து சுக்கிரனால் உண்டாகும் தாக்கத்தை சமாளிக்க உதவுவார். சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு பெயர்ந்தாலும், அது உங்கள் வளர்ச்சியை தற்போது பாதிக்காது. உங்கள் வாழ்க்கையில், பல கோணங்களில் இருந்து உங்களுக்கு நல்ல மாற்றங்களைப் பெற உங்களுக்கு நேர்மறை சக்திகள் அதிகரிக்கும்.
Prev Topic
Next Topic



















