2020 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், நல்ல பலனை தற்போது எதிர்பார்க்க முடியாது. ராகு 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், எந்த பலனையும் அவரிடம் இருந்து எதிர் பார்க்க முடியாது. குரு, செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் உடல் நலத்தை பாதிக்கக் கூடும். மேலும் உங்களுக்கு மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். புதன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து வக்கிர கதி அடைவதும் சிறப்பாக இல்லை.
சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் மன நிம்மதியை பாதிக்கக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு சில உதவிகளை செய்வார். செவ்வாய் நீங்கள் அதிக உடற் பயிற்சி செய்வதிலும், பயணம் செய்வதிலும் அதிக ஆர்வத்தை உங்களுக்கு உண்டாக்குவார்.



இந்த மாதம் எதிர்மறை சக்திகள் அதிகமாக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு ஒரு சோதனை காலமாக இருக்கும். எந்த வளர்ச்சியையும், எதிர் பார்க்காமல், நீங்கள் தற்போது இருக்கும் இடத்தை தக்க வைத்துக் கொள்வது நல்லது. மேலும், எந்த விடயமாக இருந்தாலும் சற்று நிதானித்து செய்வது நல்லது.




Prev Topic

Next Topic