![]() | 2020 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. உங்கள் ஜென்ம ராசி பாதிக்கப்படுவதால், உங்கள் உடல் நலம் சற்று பாதிக்கப்படலாம். புதன் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவதால், உங்களுக்கு தொடர்பு குறித்த விடயங்களில் பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து நீங்கள் அதிக நேரம் அலுவலக வேலைகளை செய்யும் சூழலை உண்டாக்கக் கூடும்.
கேது மற்றும் செவ்வாய் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் இணைந்து சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியை பாதிக்கக் கூடும். எனினும் குருவும், செவ்வாய் மற்றும் கேதுவுடன் இணைந்து சஞ்சரிப்பதால், உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் ஏற்படும். சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது மட்டுமே உங்களுக்கு ஒரு பின்னடைவாக இருக்கும். இதனால் நீண்ட கால அடிப்படையில் உங்கள் வளர்ச்சி பாதிக்கக் கூடும்.
சனி பகவானும், மற்றும் விரைவாக நகரும் கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால் உங்களுக்கு பதற்றமான நிலை உண்டாகும். எனினும், குரு இந்த மாதம் உங்களுக்கு ஏற்படும் தடைகளில் இருந்து வெளி வர உதவி செய்து, நல்ல வளர்ச்சியையும் தருவார்.
Prev Topic
Next Topic