2020 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


பெப்ரவரி 13, 2020 அன்று சூரியன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயருகிறார்.சுக்கிரன் இந்த மாதம் அனேக நேரம் மீன ராசியில் சஞ்சரிப்பார். புதன் கும்ப ராசியில் சஞ்சரித்து பெப்ரவரி 17, 2020 அன்று வக்கிர கதி அடைவார்.
செவ்வாய் பெப்ரவரி 8, 2020 அன்று தனுசு ராசிக்கு பெயர்ந்து குருவுடன் சேர்ந்து சஞ்சரித்து குரு மங்கள யோகத்தை உண்டாக்குவார். ராகு மிதுன ராசியிலும், கேது தனுசு ராசியிலும் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள். சனி பகவான் இந்த மாதம் மகர ராசியில் முழு செயல்பாட்டுடன் இருப்பார்
சனி பகவான் மகர ராசிக்கு பெயருவதால், அரசியல் குறித்த விடயங்கள் சற்று கடுமையானதாக இருக்கும். அனைத்து அரசியல்வாதிகளும், பெரிய தொழிலதிபர்களும் பெரும் அளவான மாற்றத்தை தங்கள் அதிர்ஷ்டத்தில் காண்பார்கள். இந்த சனி பெயர்ச்சி உலகின் பல இடங்களில் நாட்டை ஆளும் தலைவர்கள் மாறுவதற்கான சூழலை அடுத்த 12 முதல் 18 மாதங்களில் உண்டாக்கக் கூடும்.
குரு மற்றும் செவ்வாய் இணைந்து குரு மங்கள யோகத்தை உருவாக்குவதால், பெரிய நிகழ்வாக இந்த பெயர்ச்சியில் காணப்படுகின்றது. இந்த நிகழ்வு பல புதிய தலைவர்களை அரசியலில் உருவாக்கக் கூடும். எனினும், இது பல நாடுகள் மற்றும் மாநிலங்களுக்கு மத்தியில் இருக்கும் தலைவர்களுக்கு இடையே சண்டைகளோடும், பிரச்சனைகளோடும் நிகழும். புதன் வக்கிர கதி அடைவதால் குழப்பங்களும், தொடர்பு குறித்த விடயங்களில் தாமதங்களும் ஏற்படக் கூடும்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.