![]() | 2020 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 3 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சாதகமான பலன்களைத் தருவார். புதன் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிலும், சுக்கிரன் 5ஆம் வீட்டிலும் சஞ்சரித்து இந்த மாதம் உங்களுக்கு நல்ல அத்ரிஷ்டத்தை தருவார்கள். செவ்வாய் மற்றும் குரு இணைந்து உங்கள் வீட்டின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து குரு மங்கள யோகத்தை தருவார்கள். இந்த சஞ்சாரம் உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிக்கும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு நல்ல உதவிகளை செய்வார். மொத்தத்தில் நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த ஒரு புதிய பாகமாக இருக்கும். உங்கள் தோல்விகளுக்கெல்லாம் விடை கொடுக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் செய்யும் எந்த காரியமாக இருந்தாலும், அதில் எந்த தாமதமும் இல்லாமல் உங்களுக்கு பெரிய அளவு வெற்றி கிடைக்கும்.
இந்த மாதம் உங்களுக்கு பண மழை பொழியும் என்பதை நீங்கள் எதிர் பார்க்கலாம். மேலும் உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் முக்கியத்துவர் அந்தஸ்த்தை பெறுவீர்கள். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி விட முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic