![]() | 2020 January ஜனவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதத்தின் முதல் பாதியில் நல்ல பலன்களைத் தரக் கூடும். குரு மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் நல்ல அதிர்ஷ்டத்தை தருவார்கள். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜனவரி 8, 2020 அன்று பெயருகிறார். இதனால் உங்களுக்கு நல்ல செய்திகள் உங்களுக்கு வரும்.
இந்த மாதம் உங்களுக்கு ஒரு சிறிய பின்னடைவு என்னவென்றால், சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு பெயருவது தான். இதனால் உங்களுக்கு அடுத்த 7.5 ஆண்டுகளுக்கு ஏழரை சனி காலம் தொடங்க உள்ளது. எனினும், சனி பகவானின் தாக்கம் தற்போது இருக்காது.
நீங்கள் தொடர்ந்து உங்கள் நிதி நிலையில் வளர்ச்சியையும், உத்தியோகத்தில் வளர்ச்சியையும் இந்த மாதம் பெறுவீர்கள். இந்த மாதத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆகி விட முயற்சி செய்யுங்கள். முடிந்த வரை தானம் / தர்மம் செய்வதில் சற்று நேரம் மற்றும் பணத்தை செலவிடுங்கள்.
Prev Topic
Next Topic