2020 January ஜனவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிலும், 8ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது இந்த மாதம் முழுவதும் சாதகமற்ற நிலையை காட்டுகின்றது. செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், குரு 7ஆம் வீட்டிலும் சஞ்சரித்து நல்ல அதிர்ஷ்டத்தை தருவார்கள். சுக்கிரன் மற்றும் புதன் இணைந்து உங்களுக்கு சிறப்பான பலன்களைத் தருவார்கள்.
ராகு உங்களுக்கு சில உடல் உபாதைகளை தருவார். எனினும், குரு மற்றும் சுக்கிரன் நீங்கள் விரைவாக குணமடைய உதவுவார்கள். உங்களுக்கு ஜனவரி 23, 2020 அன்று அஷ்டம சனி தொடங்குகின்றது. எனினும், ஒரே இரவில் அனைத்தும் மோசமாக மாறி விடாது. நீங்கள் இந்த மாதம் தொடர்ந்து நல்ல பலனைப் பெறுவீர்கள்.


உங்கள் உடல் நலம், குடும்பம், உத்தியோகம், நிதி நிலை மற்றும் முதலீடுகள் போன்ற விடயங்களில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். குரு மற்றும் பிற விரைவாக நகரும் கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், நீங்கள் குறுகிய கால திட்டங்களை செய்யலாம். இது அடுத்த சில வாரங்களுக்கு உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.


Prev Topic

Next Topic