2020 January ஜனவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு ஜனவரி மாதம் 14, 2020, செவ்வாய் அன்று மாலை 11:55 மணிக்கு பெயருகின்றார். இதனை “பொங்கல்” பண்டிகையாகவும், மகர சங்கராந்தியாகவும் மக்கள் கொண்டாடுவார்கள்.
சுக்கிரன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு ஜனவரி 9, 2020 அன்று பெயருகிறார். செவ்வாய் இந்த மாதம் முழுவதும் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். புதன் தனுசு ராசி, மகர ராசி மற்றும் கும்ப ராசியில் பெயருவார். ராகு மிதுன ராசியிலும், கேது தனுசு ராசியிலும் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள்
குரு தனது நச்சதிர்த்தை மூல ராசியில் இருந்து பூராடம் நட்சதிரதிருக்கு ஜனவரி 4, 2020 அன்று தனுசு ராசியில் மாற்றுவார். சூரியன் மகர ராசிக்கு ஜனவரி 15, 2020 அன்று பெயர்ந்த பின், டிசம்பர் ஜனவரி 26, 2019 அன்று முதல் ஒரே இடத்தில் ஏற்பட்ட சக்தி மிகுந்த கிரக சஞ்சாரங்கள் மாறும். இந்த மாதத்தில் ஏற்பட உள்ள ஒரு முக்கிய மாற்றம் என்னவென்றால், அது சனி பகவான் மகர ராசிக்கு ஜனவரி 23, 2020 அன்று மகர ராசிக்கு பெயருவது தான்.
சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயருவதால், சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மக்களின் அதிர்ஷ்டத்தில் ஏற்படும். குறிப்பாக சனி பகவான் மகர ராசியில் சஞ்சரிக்கும் போது கடுமையான அரசியல் நிகழும். அரசியலில் இருக்கும் அனைவரும் மற்றும் மிக பெரிய தொழிலதிபர்களும் பல பெரிய மாற்றங்களை தங்கள் அதிர்ஷ்டத்தில் காண்பார்கள்.
புதிதாக பல பிரபலங்களும், முக்கியத்துவர்களும், தோன்றுவார்கள். தற்போது இருக்கும் பிரபலங்கள் தங்களது செல்வாக்கையும், புகழையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு உங்கள் மகா தசை சாதகமாக இருக்க வேண்டும்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.