2020 January ஜனவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 5 மற்றும் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் முழுவதும் சிறப்பாக உள்ளது. ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். புதன் மற்றும் சுக்கிரன் உங்களுக்கு இந்த மாதம் கலவையான பலன்களைத் தருவார்கள். செவ்வாய் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து பதற்றமான சூழலை உண்டாக்கக் கூடும்.
குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். மேலும் சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியையும், வெற்றியையும் நீண்ட காலத்திற்கு அதிகரிப்பார். உங்கள் வாழ்க்கையில் புதியாக ஒரு பாகம் தொடங்க உள்ளதை நினைத்து நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.


இந்த மாதம் நீங்கள் சோதனை காலத்தை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள். அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஜனவரி 2020 முதல் நீண்ட காலத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள். மேலும் உங்கள் வாழ்க்கையில் இந்த மாதம் விரைவாக ஒரு நல்ல திருப்பம் ஏற்படும். வெற்றியும் உண்டாகும்.



Prev Topic

Next Topic