2020 July ஜூலை மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் வீட்டிற்கு பெயருவதால், இந்த மாதத்தின் முதல் பாதி உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். புதன் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் ஜூலை 12, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைவதால், கலவையான பலன்களை நீங்கள் எதிர் பார்க்கலாம். ராகு உங்கள் ராசியின் மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பான பலனைத் தரும் என்றாலும், கேதுவிடம் இருந்து நல்ல பலனை எதிர் பார்க்க முடியாது.
சுக்கிரன் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடைந்து அதிகரிப்பார். செவ்வாய் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து சுக்கிரனால் உங்களுக்கு கிடைக்கும் லாபத்தை சற்று குறைக்கக் கூடும். குரு மீண்டும் உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு பெயர்ந்து உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்த சனி பகவான் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார்.



மொத்தத்தில் கடந்த 3 மாதங்களாக உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து விடுபட்டு, இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான பலனைத் தரும் மாதமாக அமையும். உங்கள் உத்தியோகம், நிதி நிலை மற்றும் உறவுகள் குறித்த விடயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் ராசியின் 12ஆம் வீடு பாதிக்கப்படுவதால், உங்களுக்கு தேவையற்ற பயம் உண்டாகக் கூடும். எனினும், நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதால், நீங்கள் வருத்தப்பட வேண்டாம்.
.




Prev Topic

Next Topic