![]() | 2020 July ஜூலை மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும், 1ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால், நல்ல பலன்களை எதிர் பார்க்க முடியாது. ராகு மற்றும் புதன் இணைந்து உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தை உண்டாக்கக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் பண வரத்தை அதிகரிக்கக் கூடும்.
செவ்வாய் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. உங்கள் ராசியின் 7ஆம் வெட்டில் வக்கிர கதி அடையும் சனி பகவான் மற்றும் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் வக்கிர கதி அடையும் குரு உங்களுக்கு கடந்த சில மாதங்கள் இல்லாத அளவு எதிர்பாராத பின்னடைவுகளை உண்டாக்கக் கூடும். மொத்தத்தில் உங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சி மற்றும் நிதி நிலையில் சில தாமதங்கள் ஏற்படக் கூடும்.
வரும் மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக இல்லை என்பதால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எந்த முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்னரும், நீங்கள் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்தே செயல் பட வேண்டும். முடிந்த வரை உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதற்கேற்றவாறு செயல்படுவது நல்லது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic