2020 July ஜூலை மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு ஜூலை 16, 2020 அன்று பெயருகிறார். ஜூன் 25, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்த சுக்கிரன் ரிஷப ராசியில் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்.
வக்கிர கதி அடைந்த குரு தனுசு ராசியில் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார். ராகு மிதுன ராசியிலும், கேது தனுசு ராசியிலும், இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள்.


ஜூலை 12, 2020 அன்று புதன் மிதுன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்து இந்த மாதம் முழுவதும் அதே இடத்தில் சஞ்சரிப்பார். செவ்வாய் இந்த மாதம் முழுவதும் மீன ராசியில் சஞ்சரிப்பார். வக்கிர கதி அடைந்த சனி பகவான் இந்த மாதம் முழுவதும் தனுசு ராசியில் சஞ்சரிப்பார்.
அனைத்து கிரகங்களும் ஒரே இடத்தில் சஞ்சரிப்பதால், இந்த மாதம் ஓரளவிற்கு நிலையானதாக இருக்கும். இந்த மாதத்தின் இறுதி வாக்கில் என்ன நடக்கப் போகின்றது என்பதைப் பற்றி மக்களுக்கு அதிக தெளிவு பிறக்கும். குரு மற்றும் செவ்வாயின் சஞ்சரிப்பு பங்கு சந்தைக்கு சாதகமானதாக இல்லை. சனி பகவான் சுக்கிரனோடு இணைந்து சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், COVID-19 சார்ந்த மருந்து மற்றும் தடுப்பூசி போன்ற விடயங்களை சார்ந்த பங்குகளில் அதிக நிலையற்ற நிலவரம் உண்டாகக் கூடும்.


Prev Topic

Next Topic