2020 July ஜூலை மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிலும், 8ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால், இந்த மாதம் உங்களால் சிறப்பான பலனை எதிர் பார்க்க முடியாது. ராகு மற்றும் புதன் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் தொடர்ந்து சஞ்சரித்து உங்களுக்கு உறவுகளிடம் சில பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். செவ்வாய் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து தற்போது உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை அதிகரிக்கக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் செலவுகளை அதிகரிக்கக் கூடும்.
சுக்கிரன் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு உடல் நல பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். கேது மற்றும் குரு இணைந்து உங்களுக்கு இந்த மாதம் விடயங்களை மோசமாக்கக் கூடும். இந்த மாதம் நாட்கள் நகர நகர விடயங்கள் உங்கள் கட்டுபாட்டை மீறி நடக்கக் கூடும். நீங்கள் உங்களுக்கு அடுத்த 5 மாதங்கள் வரவிருக்கும் சவால்களை சமாளிக்க உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.


இந்த சோதனை காலத்தை கடக்க நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். மூச்சு பயிற்சி மற்றும் கடவுள் வழிபாடு செய்து இந்த சோதனை காலத்தை மனோ பலத்தோடு கடக்க முயற்சி செய்யுங்கள்.


Prev Topic

Next Topic