2020 July ஜூலை மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டில் ஜூலை 16, 2020 முதல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். புதன் ஜூலை 12, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைவதால், மேலும் உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல தன்னம்பிக்கையை தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து குறுகிய காலத்தில் உங்களுக்கு சிறப்பான வளர்ச்சிப் பெற உதவுவார்.
சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. எனினும் உங்களுக்கு ஒரு பின்னடைவு என்னவென்றால், குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் நீண்ட காலம் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியை சற்று பாதிக்கக் கூடும் என்பது தான். விரைவாக நகரும் கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு சிறப்பான பலன்களும், விரைவான வளர்ச்சியும் உண்டாகும்.


எனினும், இந்த மாதம் நீங்கள் செய்யும் விடயங்கள், உங்களுக்கு ஒரு பெரிய சவாலாக செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் 2020 மாதங்களில் உண்டாகக் கூடும் என்பதால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.


Prev Topic

Next Topic