![]() | 2020 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டிற்கு பெயர்ந்து ஜூன் 15, 2020 வரை உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. புதன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவதால், தூக்கம் இல்லாத இரவுகளை நீங்கள் கழிக்க நேரிடலாம். சுக்கிரன் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் நிதி நிலையில் வளர்ச்சியை உண்டாக்குவார்.
செவ்வாய் உங்கள் அஷ்டம ஸ்தானத்திற்கு ஜூன் 18, 2020 வாக்கில் பெயர்ந்து உங்கள் பதற்றத்தையும், கோபத்தையும் குறைப்பார். குரு மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார்கள். இந்த மாதம் எந்த தடைகளும் இன்றி உங்களுக்கு தொடர்ந்து நல்ல பலன்கள் கிடைக்கும்.
உங்கள் சொந்த வாழ்க்கை, உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க நேர்மறை மாற்றங்கள் உண்டாகும். எனினும், உங்களுக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம் சில வாரங்களுக்கு மட்டுமே இருக்கும். ஜூன் 3௦, 2020 முதல் நீங்கள் அடுத்த சில மாதங்களுக்கு சோதனை காலத்தில் இருப்பீர்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic