2020 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் முழுவதும் சிறப்பாக உள்ளது. ராகு மற்றும் புதன் இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் அல்லது ரூன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் பலத்தை அதிகரிப்பார்.
செவ்வாய் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டில் இந்த மாதம் சஞ்சரித்து உங்கள் உடல் நலத்தை பாதிக்கக் கூடும். குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், சுக்கிரன் 1௦ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் இந்த மாதம் சில பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உங்கள் உத்தியோக வாழ்க்கையிலும், உத்தியோக வளர்ச்சியிலும் தடைகள் ஏற்படக் கூடும்.
இந்த மாதம் உங்களுக்கு சவால் நிறைந்த மாதமாக இருக்கும். எனினும், இந்த காலகட்டம் குறுகிய காலத்திற்கு மட்டுமே. ஜூன் 30, 2020 முதல் குரு மீண்டும் உங்கள் ராசியின் பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு பெயர்ந்த பின் சிறப்பான முன்னேற்றத்தை நீங்கள் காண்பீர்கள். ஜூலை 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் சிறப்பான வளர்ச்சியையும், வெற்றியையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic