![]() | 2020 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், சிறப்பான பலன்களை எதிர் பார்க்க முடியாது. புதன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து சில உடல் உபாதைகளை உண்டாக்கக் கூடும். ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து குடும்பத்தில் பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். எனினும், குரு மற்றும் செவ்வாய் இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து குரு மங்கள யோகத்தை உண்டாக்கி அதிக அளவு நேர்மறை சக்திகளை உண்டாக்குவார்கள். அதனால், ராகு, புதன் மற்றும் சூரியனால், எந்த எதிர்மறை பலன்களும் உண்டாகாது.
சுக்கிரன் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்கக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்கள் வளர்ச்சி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. இந்த மாதம் உங்களுக்கு பண மழைப் பொழியும். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தை பயன்படுத்தி, உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டில் ஆகா முயற்சி செய்யுங்கள்.
எனினும், குரு மார்ச் 29, 2020 முதல் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்களுக்கு சில பாதிப்புகளை உண்டாக்கக் கூடும் என்பதால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த பெயர்ச்சி சில பின்னடைவுகளை உண்டாக்கக் கூடும். எனினும், அதன் தாக்கத்தை அடுத்த மாதத்தில் இருந்து மட்டுமே உணர முடியும். மொத்தத்தில் இந்த மாதம் எந்த பின்னடைவுகளும் இல்லாத நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும்.
Prev Topic
Next Topic