![]() | 2020 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதத்தின் முதல் பாதியில் உங்களுக்கு சாதகமான நிலையை காட்டுகின்றது. புதன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து தொடர்ந்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். குரு, செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியையும், வெற்றியையும் மார்ச் 22, 2020 வரை அதிகரிப்பார்கள்.
சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து மார்ச் 9, 2020 வாக்கில் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார். ராகு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பார். மார்ச் 22, 2020 வரை அதிக அளவிலான நேர்மறை சக்திகளை நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள். இதனால் உங்களுக்கு நல்ல வெற்றிகள் கிடைக்கும்.
மார்ச் 23, 2020 முதல் செவ்வாய் மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து அதிக சவால்களை உண்டாக்குவதால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும், குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் அதி சரமாய் மார்ச் 29, 2020 அன்று பெயர உள்ளதால், விடயங்கள் மோசமாகக் கூடும். எனினும், இதன் தாக்கம் ஏப்ரல் 2020ல் அதிகம் உணரப்படும்.
Prev Topic
Next Topic