2020 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், 9ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் நல்ல பலன்களை எதிர் பார்க்க முடியாது. ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் உண்டாக்கக் கூடும். செவ்வாய், கேதுவுடன் இணைந்து சஞ்சரித்து ரூன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து உடல் நல பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். புதன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து தொடர்பு குறித்த பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் மனைவி/கணவனுடன் கருத்து வேறுபாடுகளை உண்டாக்கக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. எனினும், எதிர்மறை சக்திகளின் அளவு அதிகமாக உள்ளது. இதனால் இந்த மாதம் உங்களுக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும்.


உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், மார்ச் 29, 2020 அன்று குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் அதி சரமாய் சஞ்சரிப்பது தான். அதனால் மார்ச் 3௦, 2020 முதல் அடுத்த சில மாதங்களுக்கு உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் .


Prev Topic

Next Topic