![]() | 2020 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
மார்ச் 14, 2020 முதல் சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான பலனைத் தரும். புதன் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரித்து நல்ல பலன்களைத் தருவார்கள்.
குரு மற்றும் செவ்வாய் இணைந்து விரைய ஸ்தானத்தில் சஞ்சரித்து அதிக செலவுகளை உண்டாக்கக் கூடும். சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும், மார்ச் 22, 2020 வரை உங்கள் வளர்ச்சியை பாதிக்க மாட்டார். அதனால் விடயங்கள் உங்கள் கட்டுபாட்டிற்குள் இருக்கும். மார்ச் 22, 2020 வரை நல்ல முன்னேற்றத்தைப் காண்பீர்கள்.
எனினும், குரு, சனி பகவான் மற்றும் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இணைந்து சஞ்சரிபதால், இந்த அமாதத்தின் இறுதி வாரத்தில் கவனமாக் ஐருக்க வேண்டும். இந்த சஞ்சாரத்தால் உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படக் கூடும். மார்ச் 22, 2020 முதல் எந்த முக்கிய முடிவுகளும் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் பிறந்த சாதகத்தின் பலனை பார்த்து அதன் பின்னர் எந்த முடிவும் எடுப்பது நல்லது.
Prev Topic
Next Topic