![]() | 2020 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான பலனைத் தராது. ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். புதன் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் மனைவி/கணவனுடன் சில சிறிய கருத்துவேறுபாடுகளை உண்டாக்கக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீடான ரூன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து நல்ல அதிர்ஷ்டத்தை உங்களுக்கு தருவார்.
குரு மற்றும் செவ்வாய் இணைந்து உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார். சுக்கிரன் உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சிறப்பாக உள்ளது. மொத்தத்தில் இந்த மாதம் உங்கள் வளர்ச்சியும், வெற்றியும் தொடர்ந்து இருக்கும்.
எனினும், மார்ச் 29, 2020 முதல் குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு பெயர்ந்து சில பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic