2020 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 5 மற்றும் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து மார்ச் 14. 2020 முதல் நல்ல பலனைத் தருவார். புதன் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிலும், சுக்கிரன் 7ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. குரு மற்றும் சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால், இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு வலி மிகுந்ததாக இருக்கும்.
செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து சில நிவாரணத்தை தருவார். எனினும், ராகு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பிரச்சனைகளின் தாக்கத்தை அதிகரிக்கக் கூடும். நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு முன் உங்கள் பிறந்த சாதகத்தின் பலத்தை தெரிந்து கொள்வது நல்லது.


செவ்வாய் மற்றும் சனி பகவான் இணைந்து எதர் பாராத பின்னடைவுகளை மார்ச் 22, 2020 முதல் மார்ச் 29, 2020 வரை உண்டாக்கக் கூடும்,. குரு உங்கள் 4ஆம் வீட்டிற்கு மார்ச் 29, 2020 அன்று அதி சரமாய் பெயர்ந்த பின் குறிப்பிடத்தக்க நிவாரணத்தை காண்பீர்கள்.


Prev Topic

Next Topic