![]() | 2020 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. ராகு மற்றும் கேதுவிடம் இருந்து எந்த பலனையும் எதிர் பார்க்க முடியாது. புதன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து தொடர்ந்து தொடர்பு குறித்த விடயங்களில் பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். குரு மற்றும் செவ்வாய் இணைந்து உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உத்தியோகத்தில் உங்கள் வளர்ச்சியை பாதிக்கக் கூடும்.
சுக்கிரன் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து நிதி பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் நிதி பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வை தருவார். இந்த மாதத்தின் முதல் ஓரிரு வாரங்கள் சில பின்னடைவுகள் இருந்தாலும், இந்த மாதத்தின் இரண்டாம் பகுதி சிறப்பாக இருக்கும்.
செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் மார்ச் 22, 2020 அன்று சஞ்சரித்தும், குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு மார்ச் 29, 2020 அன்று பெயர்ந்து உங்கள் 11ஆம் வீட்டை பல மடங்கு பலப்படுத்துவார்கள். மார்ச் 23, 2020 முதல் மார்ச் 31, 2020 வரை உங்களுக்கு நல்ல செய்திகள் வரும்.
Prev Topic
Next Topic