2020 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் நல்ல பலன்களைத் தருவார். புதன் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல பலன்களைத் தருவார், சுக்கிரன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார்.
செவ்வாய், கேது மற்றும் குரு இணைந்து சஞ்சரித்து மார்ச் 21, 2020 வரை உங்களுக்கு கசப்பான அனுபவங்களை தரக் கூடும். உங்கள் குடும்பத்தில் அதிக பிரச்சனைகள் இருக்கக் கூடும். அலுவலகத்தில் நடக்கும் அரசியலும், சண்டைகளும் உங்கள் மன நிம்மதியை எடுத்து விடக் கூடும். உங்கள் வாழ்க்கையில் நடப்பதை ஏற்றுக் கொள்வது உங்களுக்கு மிகக் கடினமாக இருக்கும்.


எனினும், மார்ச் 22, 2020 முதல் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். மார்ச் 3௦, 2020 முதல் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். முக்கியமான முடிவுகள் ஏதாவது எடுக்க வேண்டும் என்றால், அடுத்த 4 வாரங்கள் காத்திருந்து, பின்னர் எடுப்பது நல்லது.


Prev Topic

Next Topic