2020 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பது மார்ச் 14, 2020 வரை உங்களுக்கு சாதகமான நிலையாக இருக்கும். ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலனைத் தரமாட்டார்கள். செவ்வாய் மற்றும் குரு இணைந்து உங்கள் வளர்ச்சியை பாதிக்கக் கூடும். குறிப்பாக உங்கள் உடல் நலத்தை பாதிக்கக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து நிதி நிலையில் உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பார். புதன் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது.
இந்த மாதம் நீங்கள் கலவையான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் உத்தியோகத்திலும், நிதி நிலையிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும். எனினும் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளும், உடல் உபாதைகளும் தொடரும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு அதி சரமாய் மார்ச் 29, 2020 அன்று பெயருகிறார். இதனால் உங்கள் குடும்பம் மற்றும் உறவுகளில் இருக்கும் பிரச்சனைகளுக்கு, இந்த மாதத்தின் இறுதி சில நாட்கள் நல்ல தீர்வு கிடைக்கும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic