2020 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் MAY 15, 2020 வரை நல்ல பலனைத் தருவார். புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியை உண்டாக்குவார்கள். ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து தொடர்ந்து உங்கள் குடும்பத்தில் சில பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். கேது உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து நிதி நிலையில் நல்ல அதிர்ஷ்டத்தை அதிகரிப்பார்.
சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு மன அழுத்தத்தை தரக் கூடும். உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்படக் கூடும். இந்த மாதம் ஏழரை சனியின் தாக்கம் அதிகமாக உணரப்படும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசிக்கு பெயருவதால், உங்கள் கோபம் அதிகரிக்கக் கூடும்.


உங்கள் நிதி நிலை மற்றும் உத்தியோகத்தில் மிதமான வளர்ச்சி இருக்கும். எனினும், குடும்பத்தில் பிரச்சனை அதிகமாக இருக்கக் கூடும். சுப காரியங்கள் நடக்கும், எனினும், அதிக செலவுகளும், அழுத்தம் நிறைந்த சூழலும் இருக்கக் கூடும். குரு தனுசு ராசிக்கு ஜூன் 3௦, 2020 அன்று பெயர்ந்த பின் சற்று ஆறுதலான சூழல் நிலவும்.


Prev Topic

Next Topic