2020 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது, இந்த மாதம் உங்களுக்கு சாதகமற்ற நிலையை காட்டுகின்றது. புதன் உங்கள் ராசியின் 1, 2, மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். ராகு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து, தொடர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார், கேது உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டல் சஞ்சரித்து மே 13, 2020 அன்று வக்கிர கதி அடைவதால், உங்கள் உறவுகள் மற்றும் முதலீடுகள் குறித்த விடையங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மே 14, 2020 அன்று வக்கிர கதி அடையும் குரு உங்களுக்கு நல்ல பலனைத் தரக் கூடும். உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு செவ்வாய் பெயருவது சிறப்பாக உள்ளது, சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து தொடர்ந்து உங்கள் உத்தியோக வளர்ச்சியில் சில தடைகளை உண்டாக்கக் கூடும். எனினும், கடந்த மாதத்தை விட இந்த மாதம் விடயங்கள் சற்று ஆறுதலாக இருக்கும். இந்த மே 2020ள் உங்கள் வளர்ச்சி சற்று மிதமாகவே இருக்கும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic