2020 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் 4 மற்றும் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் சாதகமாக இல்லை, புதன் உங்களுக்கு இந்த மாதம் கலவையான பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவது நல்ல பலனைத் தரும். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரித்து நல்ல பலன்களைத் தருவார்கள்.
எனினும், குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு கசப்பான அனுபவங்களைத் தருவார்கள். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருந்து வெளியேர் உங்கள் கோபத்தை குறைப்பார். எனினும், எதிர்மறை சக்திகள் இருக்கவே செய்யும். உங்கள் உடல் நலம், உத்தியோகம், நிதி நிலை மற்றும் உறவுகள் குறித்த விடயங்களில் பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.


இந்த மதம் எந்த நிவாரணமும் பெரிதாக உண்டாகாது. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், பண இழப்பு ஏற்படக் கூடும். இந்த சோதனை காலத்தை கடக்க, நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.


Prev Topic

Next Topic