2020 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டல் சஞ்சரிப்பது உங்களுக்கு சிறப்பாக உள்ளது. புதன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து தொடர்ந்து உங்களுக்கு நல்ல பலனைத் தருவார்.
செவ்வாய் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உடல் நலத்தை மே 5, 2020 முதல் பாதிக்கக் கூடும். குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், சுக்கிரன் 1௦ஆம் வீட்டிலும் வக்கிர கதி அடைவதால் உங்கள் குடும்பத்தினர்களுடனும், அலுவலகத்திலும் அதிக சண்டைகளும், வாக்குவாதங்களும் ஏற்படக் கூடும்.


சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில், சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால், நீண்ட காலத்திற்கு உங்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. எனினும் அடுத்த 8 வாரங்களுக்கு குரு மற்றும் செவ்வாய் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால், சிறப்பான பலன்களை எதிர் பார்க்க முடியாது. இந்த மாதம் அதிக தடைகளையும், சவால்களையும் சந்திப்பீர்கள். நீங்கள் பொறுமையாக இருந்து, இந்த கடினமான சூழலை சமாளித்து விட்டால், ஜூலை முதல் வாரம் முதல் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.


Prev Topic

Next Topic