2020 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நவம்பர் 15, 2020 முதல் நீங்கள் நலல் பலனை எதிர்பார்க்கலாம். சுக்கிரன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்குவார். புதன் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்து நல்ல பழனித் தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
ராகு மற்றும் கேது உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க மாட்டார்கள். சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு தடைகளையும், வளர்ச்சியில் தாமதத்தையும் உண்டாக்கக் கூடும். உங்களுக்கு ஒரே ஒரு நிவாரணம் என்னவென்றால், நவம்பர் 2௦, 2020 வரை குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவது தான். நவம்பர் 2௦, 2020 வரை உள்ள காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் செட்டிலாக முயற்சி செய்யுங்கள். இடமாற்றம், உத்தியோகத்தில் மாற்றம் போன்ற எந்த மாற்றங்களையும் தேவை இல்லாமல் உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.


குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு நவம்பர் 2௦, 2020 அன்று பெயருகிறார். குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து 1.5 ஆண்டு நீண்ட கால சோதனை காலத்தில் உங்களை வைப்பார்கள். விரைவாக நகரும் கிரகங்களால் உங்களுக்கு சில வாரங்களுக்கு, கோச்சார கிரகங்களின் அடிப்படையில் சில நிவாரணம் கிடைக்கும். நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும்.


Prev Topic

Next Topic