2020 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டிற்கு பெயருவதால் இந்த மாதம் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. சுக்கிரன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார்.
சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிலும், கேது 5ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் உடல் நலம் மற்றும் குடும்பம் குறித்த விடயங்களில் பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். புதன் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் பலவீனமான இடத்தில் சஞ்சரித்தாலும், நவம்பர் 2௦, 2020 வரை மட்டுமே இந்த பாதிப்பு இருக்கும்.


குரு உங்கள் ராசியின் 7ஆம் வீடான களத்திற ஸ்தானத்திற்கு நவம்பர் 2௦, 2020 அன்று பெயர்ந்த பின் குரு சனி பகவானால் உங்களுக்கு ஏற்படும் எதிர்மறை சக்திகளை தடுத்து, நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்குவார். குரு ராகுவை பார்வை இடுவதால் உங்கள் அதிர்ஷ்டம் மேலும் பல மடங்கு அதிகரிக்கும்.
இந்த மாதம் சற்று மந்தமாக உங்களுக்குத் தொடங்கினாலும், நவம்பர் 21, 2020 முதல் நீங்கள் பெரும் அளவு மகிழ்ச்சியையும், வெற்றியையும் காண்பீர்கள். குரு 3௦ கோணத்தை ஒரே முறையில் மகர ராசியில் கடப்பதால் இந்த அதிர்ஷ்டம் எந்த இடைவேளையும் இன்றி அடுத்த 6 மாதங்களுக்கு உங்களுக்கு இருக்கும்.



Prev Topic

Next Topic