![]() | 2020 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. செவ்வாய் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் நவம்பர் 14, 2020 வாக்கில் வக்கிர நிவர்த்தி அடைவது உங்களுக்கு சிறப்பாக உள்ளது. சுக்கிரன் உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து நவம்பர் 17, 2020 வரை உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார். ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்களை மன ரீதியாக சற்று பாதிக்க கூடும். ஆனால் கேது உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்.
புதன் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார். ஆனால் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது நீண்ட காலத்திற்கு ஒரு பலவீனமான விடயமாகும். நவம்பர் 17, 2020 வரை விரைவாக நகரும் கிரகங்களின் பலத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு விரைய செலவுகளை இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களுக்கு உண்டாக்கக் கூடும்.
ஒரு முக்கிய சவால் நிறைந்த நிகழ்வு என்னவென்றால், குரு உங்கள் ஜென்ம ராசிக்கு நவம்பர் 2௦, 2020 அன்று பெயருவது தான். ஜென்ம சனி மற்றும் ஜென்ம குரு ஆகிய இரண்டும் சேர்ந்து உங்களுக்கு நவம்பர் 21, 2020 முதல் கசப்பான அனுபவங்களை உண்டாக்கக் கூடும். குரு 3௦ கோணத்தை உங்கள் ஜென்ம ராசியில் ஒரே முறையில் அதிக வேகத்தோடு கடப்பதால் இந்த பெயர்ச்சி காலம் தொடங்கிய உடன் உங்களுக்கு சாதகமற்ற நிகழ்வுகள் நடக்கத் தொடங்கி விடும்.
நவம்பர் 21, 2020 முதல் ஏப்ரல் 14, 2020 வரை நீங்கள் கடுமையான சோதனை காலத்தில் எந்த இடைவேளையும் இல்லாமல் இருப்பீர்கள். நீங்கள் எதை செய்தாலும் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின்னர் செயல்படுவது நல்லது. உங்கள மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த ஜென்ம சனியின் தாக்கத்தை கடக்க முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic