2020 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 5 மற்றும் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் நல்ல பலன்களைத் தருவார். புதன் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் உண்டாக்கக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும், கேது 6ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது.
செவ்வாய் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து நவம்பர் 14, 2020 முதல் பின்னடைவுகளை உண்டாக்கக் கூடும். குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல பலன்களைத் தந்தாலும், அது நவம்பர் 2௦, 2020 வரை மட்டுமே. குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு நவம்பர் 2௦, 2020 அன்று பெயர்ந்த பின் நீங்கள் கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள். மேலும் சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் அடுத்த 5 மாதங்களுக்கு நவம்பர் 21, 2020 முதல் அஷ்டம சனியின் தாக்கம் அதிகமாக இருக்கக் கூடும்.
நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அதனை நவம்பர் 13, 2020க்கு முன்பே எடுத்து விடுவது நல்லது. உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு நவம்பர் 21, 2020 முதல் அடுத்த 5 மாதங்களுக்கு வரக்கூடிய சோதனை காலத்தை நீங்கள் கடக்க முயற்சிக்க வேண்டும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic